சிறந்த பெண் கால்பந்தாட்ட வீரருக்கான பிபிசியின் விருது அறிவிப்பு

பிரசுரிக்கப்பட்டது

உலகளவில் சிறந்த பெண் கால்பந்தாட்ட வீரருக்கு பிபிசி முதல் முறையாக வழங்கும் விருதை நைஜீரியாவின் அஸிசாட் ஓஷோஅலா பெற்றுள்ளார்.

சாதனைப் பெண்மணி அஸிசாட் ஓஷோஅலா
படக்குறிப்பு, சாதனைப் பெண்மணி அஸிசாட் ஓஷோஅலா

இருபது வயதாகும் ஓஷோஅலா கடந்த கோடைக் காலத்தில் கனடாவில் 20 வயதுக்கும் குறைவானவர்களுக்காக நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் நைஜீரியா சார்பில் பங்குபெற்றிருந்தார்.

அந்தப் போட்டியில் மிக அதிகமாக கோல்களை அடித்திருந்ததால் அவருக்கு தங்கக் காலணி விருதும் வழங்கப்பட்டிருந்தது.

இங்கிலாந்தில் மகளிருக்கான மிக உயர்ந்த போட்டியான விமன்ஸ் சூப்பர் லீக் போட்டியில், அவர் தற்போது லிவர்பூல் மகளிர் அணிக்காக விளையடி வருகிறார்.

அந்த லீக் போட்டிகளில் விளையாடும் முதல் ஆப்ரிக்க வீரரும் அவர்தான்.

பிபிசியின் இந்த விருதுக்கு இறுதி கட்டப் போட்டியிலிருந்த இதர நான்கு பேரை பின்னிக்குத் தள்ளி இந்த விருதை அவர் பெற்றார்.

இறுதிச் சுற்றில் அஸிசாட் ஓஷோஅலாவைத் தவிர பிரேசில், ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த வீரர்களும் போட்டியில் இருந்தனர்.