டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து மஹேல ஜெயவர்தன ஓய்வு

டெஸ்ட் போட்டிகளிலிருந்து விடை பெறுகிறார் மஹேல ஜெயவர்தன
படக்குறிப்பு, டெஸ்ட் போட்டிகளிலிருந்து விடை பெறுகிறார் மஹேல ஜெயவர்தன
பிரசுரிக்கப்பட்டது

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், பிரபல ஆட்டக்காரருமான மஹேல ஜெயவர்தன, டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.

அவர் 145 டெஸ்ட் போட்டிகளில் ஆடி, அதில் 33 சதங்களை அடித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அவரது சராசரி ஓட்டவீதம் 50.18

கடந்த 2006 ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியில், தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக 374 ஓட்டங்களை எடுத்திருந்தார். அதுவே ஒரு இன்னிங்ஸில் அவர் எடுத்த அதிக ஓட்டங்களாகும்.

தான் ஓய்வு பெறுவதற்கு சரியான தருணம் வந்துள்ளது என்று கூறியுள்ள மஹேல ஜெயவர்தன, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

எனினும், அவர் ஒருநாள் போட்டிகளில் இலங்கைக்காக பங்குபெற தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 18 ஆண்டுகளாக இலங்கைக்காக விளையாடி வரும் அவர், இந்த முடிவை எடுப்பது மிகவும் சிரமமாகவே இருந்தது என்று கூறியுள்ளார்.

முதல் போட்டி

ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து அவர் ஆடவுள்ளார்.
படக்குறிப்பு, ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து அவர் ஆடவுள்ளார்.

அவர் 1997 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக கொழும்பில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக ஆடினார். அந்தப் போட்டியின் முதல் ஆட்டத்தில் 66 ஓட்டங்களை எடுத்தார்.

அர்ஜுன ரணதுங்க தலைமையிலான அந்த இலங்கை அணி, அந்தப் போட்டியின் முதல் ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 952 ஓட்டங்களை எடுத்து ஆட்டத்தை முடித்துக் கொண்டதாக அறிவித்தது.

அந்த சாதனையை இன்றுவரை நீடிக்கிறது.

அவர் ஏற்கனெவே 20 ஓவர்களைக் கொண்ட போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளார்.