கறுப்பு சந்தையில் ஒலிம்பிக் டிக்கெட்டுகள்?

பட மூலாதாரம், getty images
லண்டன் ஒலிம்பிக் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் ஆயிரக்கணக்கானவற்றை சில ஒலிம்பிக் பிரதிநிதிகள் கறுப்பு சந்தையில் விற்கத் தயாராக இருக்கின்றனர் என்று எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை சர்வதேச ஒலிம்பிக் சங்கம் (ஐஓசி) விசாரித்துவருகிறது.
பிரிட்டிஷ் பத்திரிகையான சண்டே டைம்ஸில் வெளியாகியுள்ள இந்தக் குற்றச்சாட்டை தாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்வதாக ஐஓசி கூறுகிறது.
கறுப்பு சந்தையில் ஒலிம்பிக் டிக்கெட்டுகளை விற்பதற்கான மத்தியகிழக்கைச் சேர்ந்த ஒரு சட்டவிரோத முகவர் போல தமது பத்திரிகைகாரர்கள் நடித்தபோது, அவர்களிடம் டிக்கெட்டுகளைத் தர ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளும் உத்தியோகபூர்வ முகவர்களும் முன்வந்ததாக அந்தப் பத்திரிகை கூறுகிறது.
சில முக்கிய விளையாட்டுப் போட்டிகளுக்கான நுழைவுச் சீட்டு குறிப்பிடப்பட்ட விலையை விட பத்து மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுவதாகத் தெரிகிறது.
பிரிட்டிஷ் அதிகாரிகள், முகவர்கள் மீது இந்தக் குற்றச்சாட்டு இருப்பதாகத் தெரியவில்லை.




























