BBC News, தமிழ் - முகப்பு
முக்கிய செய்திகள்
கொளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.எஸ். பாபு காலமானார் - முதல்வர் விஜய், ஸ்டாலின் கூறியது என்ன?
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு காலமானார்.
திறக்கப்பட்டது அணையா, கால்வாய் மதகா? – தேனி சோத்துப்பாறை விவகாரத்தில் என்ன நடந்தது?
சோத்துப்பாறை அணையின் மதகை அனுமதியின்றித் திறந்ததாக எழுந்த புகார் அரசியல் சர்ச்சையாகியுள்ளது. இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அனுமதியின்றி மதகைத் திறந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விஜயை விமர்சித்துள்ளார். தவெகவினர் சட்டவிரோதமாக அணையைத் திறப்பதாகவும், முதலமைச்சர் விஜய் இந்த விவகாரத்தில் மௌனம் காப்பதாகவும் அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் பின்னணி குறித்து இந்தக் கட்டுரை விவாதிக்கிறது.
மு.க.ஸ்டாலினை தோற்கடித்த வி.எஸ்.பாபு யார்? திமுக முதல் தவெக வரை அவரது அரசியல் பயணம்
கொளத்தூர் தொகுதி த.வெ.க சட்டப்பேரவை உறுப்பினர் வி.எஸ்.பாபு, நீண்டகால சுவாசப் பிரச்னை காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுமார் 70 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தனது 75-ஆவது வயதில் காலமானார். வடசென்னையில் தி.மு.கவின் முக்கிய முகமாக அறியப்பட்ட அவர், 2006-ஆம் ஆண்டு புரசைவாக்கம் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகளில் பயணித்தார். கடந்த பிப்ரவரி மாதம் த.வெ.கவில் இணைந்த அவருக்கு கொளத்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து கவனம் பெற்றார். இந்த வெற்றிக்குப் பிறகு ஸ்டாலின் குறித்து அவர் தெரிவித்த கருத்துகளும், காட்டிய சைகையும் சர்ச்சையை ஏற்படுத்தின. அவரது மறைவால் கொளத்தூர் தொகுதி காலியாகியுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை இதன் மூலம் ஆறாக உயர்ந்துள்ளது.
தலைமைச் செயலக உதவியாளராக இருந்த விவேக் 'சின்னக் கலைவாணர்' ஆனது எப்படி? திரையுலகினர் பகிரும் நினைவுகள்
விவேக்கிற்கு 'சின்னக் கலைவாணர்' பட்டம் கிடைத்தது எப்படி? நகைச்சுவைக் காட்சிகளை உருவாக்கும்போது அவர் எவற்றுக்கு முக்கியத்துவம் அளித்தார்?
'புதைத்த இடத்திலேயே மீண்டும் புதைக்க வேண்டிய நிலை' - கோவையில் அருந்ததியர் மக்கள் போராடுவது ஏன்? பிபிசி களஆய்வு
''எனது அம்மா துணை வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்தவர். அவர் கடந்த பிப்ரவரியில் இறந்துவிட்டார். அவரை இங்கேதான் புதைத்தோம். இப்போது அந்த இடமே தெரியாத அளவுக்கு புதர் மண்டிக்கிடக்கிறது. குப்பைகளுக்கு மத்தியில்தான் நாங்கள் எங்கள் மக்களை புதைத்து வருகிறோம். நாங்கள் அருந்ததியர் என்பதால் 84 சென்ட் மயான இடத்தில் வெறும் 10 சென்ட் இடத்துக்குள் எங்களை முடக்குகின்றனர்!''
2070-ல் இந்தியாவின் இந்து - முஸ்லிம் மக்கள் தொகை எப்படி மாறும்? பியூ ஆய்வு கூறுவது என்ன?
பியூ ஆய்வின்படி, 2070ஆம் ஆண்டிலும் இந்தியாவில் இந்துக்களே பெரும்பான்மையாக இருப்பார்கள்; அதேவேளையில், முஸ்லிம்களின் மக்கள்தொகைப் பங்கு 15 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப், புதினுடன் வரலாற்றுச் சந்திப்பு: ஷி ஜின்பிங்குக்கு கிடைத்த வாய்ப்புகளும் சவால்களும் என்ன?
டிரம்ப், புதின் உடனான வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பின் மூலம் உலக அரசியலில் சீனாவின் செல்வாக்கை வெளிப்படுத்த ஷி ஜின்பிங் முயன்றாலும், யுக்ரேன் போர், அணு ஆயுதக் கட்டுப்பாடு, உள்நாட்டுப் பொருளாதார நெருக்கடி ஆகியவை அவருக்குச் சவாலாக உள்ளன.
அக்வான் புயல் எங்கு உள்ளது? எங்கே கரையைக் கடக்கும்? - சமீபத்திய தகவல்கள்
அக்வான் புயல் ஆந்திரா – ஒடிசா கடற்கரையைக் கடக்கவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் நவம்பர் 23, 24ஆம் தேதிகளில் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழையும், டெல்டா மற்றும் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழ்நாடு எஸ்சி, எஸ்டி ஆணையத் தலைவராக முன்னாள் நீதிபதி முரளிதரன் நியமனம் - விமர்சனம் ஏன்?
யார் இந்த நீதிபதி எம்.வி. முரளிதரன்? அவரது முந்தைய தீர்ப்புகள் ஏன் விவாதப் பொருளாகிறது? அவரது நியமனம் தொடர்பாக ஆதரவாகவும் எதிராகவும் முன்வைக்கப்படும் கருத்துகள் என்ன?
இந்திய கேப்டனை நோக்கி பாலத்தீன வீரர் செய்த சைகை - இனவெறி என சர்ச்சை எழுந்தது ஏன்?
மலேசியாவில் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பைக் கால்பந்துத் தகுதிப் போட்டியில் இந்தியா 4-1 என்ற கோல் கணக்கில் பாலத்தீனத்தை வென்ற நிலையில், இந்திய கேப்டனிடம் பாலத்தீன வீரர் இனவெறிச் சைகை காட்டியதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து இந்திய கால்பந்து சம்மேளனம் ஆசிய கால்பந்து கூட்டமைப்பிடம் புகார் அளித்துள்ளது.
தஞ்சை பெரிய கோயில் உலகின் புதிய 7 அதிசயங்கள் பட்டியலில் இடம்பெறுமா? அதற்கான தகுதிகள் என்ன?
தஞ்சை பெரியார் கோயிலை உலக அதிசயங்கள் பட்டியலில் இடம்பெற பரிந்துரைக்கவுள்ளதாக, நாடாளுமன்றக் குழுத் தலைவர் கூறியுள்ளார்.
ஹனி ட்ராப்: காதல், உறவுகளை பயன்படுத்தி ரகசிய தகவல்களை பெறும் ஆயுதம் - வரலாற்றில் பதிவான சம்பவங்கள்
உளவுத்துறை மற்றும் அரசியல் தூதரக உலகில் காதலும் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்படலாம். இந்த ஆயுதம் 'ஹனிட்ராப்' (காதல் வலை) என்று அழைக்கப்படுகிறது.
பாட்காஸ்ட்: உலகின் கதை
சர்வதேச அளவில் விவாதிக்கப்படும் மாறுபட்ட தலைப்புகள் தொடர்பாக வராந்தோறும் ஓர் ஆழமான அலசல்
சிறப்புப் பார்வை
தமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்ப இலங்கைத் தமிழர்கள் தயக்கமா? பிபிசி தமிழ் கள ஆய்வு
தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் விருப்பம் என்ன? தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்குத் திரும்பியவர்களின் தற்போதைய நிலை என்ன? என்பது போன்ற விஷயங்களைத் தெரிந்துகொள்ள பிபிசி தமிழ் தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் கள ஆய்வு மேற்கொண்டது.
'அகல் விளக்கு' பதிப்பக முகவரியில் உண்மையில் என்ன இருக்கிறது? பெரியார் அறிவுலக சர்ச்சை பற்றி பிபிசி கள ஆய்வு
கோவையில் அமைந்துள்ள பெரியார் அறிவுலகத்துக்கான நூல்கள் கொள்முதலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுந்த சர்ச்சையின் மையப்புள்ளியான அகல் விளக்கு பதிப்பகத்தின் முகவரியை பிபிசி தமிழ் நேரில் கள ஆய்வு செய்தது. அப்போது தெரிய வந்தது என்ன?
காசிக்கும் தமிழுக்கும் இத்தனை தொடர்புகளா? தமிழ் அகோரியுடன் உரையாடிய செய்தியாளரின் பயண அனுபவம்
காசிக்கும் தமிழர்களுக்கும் இடையேயான தொடர்பை அறிந்துகொள்ள அந்த நகரத்துக்கு பயணப்பட்டேன். அந்தப் பயண அனுபவமே இந்தக் கட்டுரை.
மான் குட்டியை வாயில் கவ்விய பெண் சிங்கம் வேட்டையாடாமல் காப்பாற்றியது ஏன்?
குஜராத்தின் சாசன் கிர் பகுதியில் பெண் சிங்கம் ஒன்று தான் வேட்டையாடிய மான் குட்டியைச் சாப்பிடாமல் அதைப் பிற சிங்கங்களிடம் இருந்தும்கூட காப்பாற்றியுள்ளது. ஏன்?
'சில்லறை தகராறில் பேருந்தில் இருந்து தள்ளி விடப்பட்ட பெண் நடத்துநர் பலி' - பேருந்துக்குள் என்ன நடந்தது?
சில்லறைக்காக ஏற்பட்ட தகராறில் பெண் பயணி ஒருவர் தாக்கியதால் பேருந்தில் இருந்து கீழே விழுந்த நடத்துநர் பிரவாலிகா, நவம்பர் 3ஆம் தேதி உயிரிழந்ததாக அவரது தாயார் விஜயலட்சுமி பிபிசியிடம் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது?
வங்கக்கடலில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் புயல்கள் அதிகம் உருவாவது ஏன்?
ஒவ்வோர் ஆண்டும் வங்கக் கடலில் உருவாகும் பெரும்பாலான புயல்கள் இந்த இரண்டு மாதங்களில்தான் உருவாகின்றன என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஏன் அதிக எண்ணிக்கையிலான புயல்கள் உருவாகின்றன என்பதைக் கண்டறிய, இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் இன்காய்ஸ் (இந்திய தேசிய கடல் தகவல் சேவைகள் மையம்) ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளிடம் பிபிசி பேசியது.
மத நம்பிக்கையால் ரத்தம் செலுத்தும் சிகிச்சையை ஏற்க மறுத்த இளைஞர் என்ன ஆனார்?
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், 26 வயதான ஐசக் வால்டெஸ் தனது வீட்டிற்கு அருகிலுள்ள நூலகத்தில் புத்தகங்களைப் பார்த்துக்கொண்டிருந்தபோது அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. இதனால் அவரது உடல் கடுமையாகக் குலுங்கியதுடன், தலை தரையில் மோதியது.
பசிபிக் பெருங்கடலின் ஒரு சிறிய தீவில் ஆண்டுக்கணக்கில் சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண் - என்ன காரணம்?
இலங்கைக்குத் திரும்புவதற்கான போக்குவரத்து விசா கிடைக்காமல், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவின் விசா மறுப்புகளால் பசிபிக் பெருங்கடலில் உள்ள குக் தீவில் சுமார் மூன்று ஆண்டுகளாகத் தவித்து வருகிறார் 50 வயது இலங்கைப் பெண் ருச்சிரா ரணசிங்கே
இந்தியாவில் ஒரு பேரரசை உருவாக்க அடிகோலிய ராபர்ட் கிளைவ் மீது இங்கிலாந்தில் மக்களிடையே அதிருப்தி ஏன்?
சதி, துரோகம், பிளாசிப் போர் வழியாக கிளைவ் இந்தியாவில் ஆங்கிலேய ஆதிக்கத்தின் அடித்தளமிட்டது குறித்து பேசுகிறது இந்தக் கட்டுரை.
பச்சைப் பால் குடிப்பது நல்லதா? ஆரோக்கிய நன்மைகள் உள்ளதாகச் சொல்வது உண்மையா?
பதப்படுத்தப்படாத பால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முதல் பால் பொருள்களால் ஏற்படும் ஒவ்வாமையைத் தடுப்பது, செரிமானத்தை மேம்படுத்துவது வரை அனைத்தையும் செய்ய முடியுமா?
திரையரங்கம் தவிர ஒரு படத்திற்கு வேறு என்ன வருவாய் ஆதாரங்கள் உள்ளன? 5 கேள்வி - பதில்கள்
இந்தியாவில் திரைப்படத் துறை என்னென்ன வழிகளில் எல்லாம் வருவாய் ஈட்டுகிறது? ஒரு திரைப்ப்படத்தைத் தயாரிப்பதில் தயாரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?
அமெரிக்க தேர்தலில் டிரம்பின் தோல்வி இரான், யுக்ரேன் மற்றும் சீனா விவகாரத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் டிரம்புக்கு ஏற்பட்ட படுதோல்வியும் ஜனநாயகக் கட்சிக்குக் கிடைத்த வெற்றியும் உலகின் பிற பகுதிகளுக்கு எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்? இரான், யுக்ரேன் போரில் ஏற்படும் தாக்கம் என்ன?
இஸ்ரேல் – இரான் மோதல்
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பில்.
பிபிசி தமிழ் - தொலைக்காட்சி செய்திகள்
பதினைந்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை - வாரத்தில் ஐந்து நாட்கள்



















































































