இந்தியாவிலும், நேபாளத்திலும் பெய்த கனமழைக்கு இதுவரை 200 பேர் பலி

பட மூலாதாரம், Reuters
தொடர்ந்து பெய்து வரும் பருவகால கனமழையால் இந்தியாவிலும், நேபாளத்திலும் அதிக இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சனிக்கிழமை மட்டும் இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 36 பேர் இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை மாநகரில் மழையால் பலவீனமான கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததால் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக ஏறக்குறைய 200 பேர் பலியாகியுள்ளனர்.

பட மூலாதாரம், Reuters
நேபாளத்தின் தாழ்நிலங்களில், குடிநீர் மாசடைந்துள்ளது, பலரும் வயிற்றுப்போக்கால் அவதியுறுகின்றனர்.
சில பகுதிகளில், கொடிய பாம்புகளும், தவளைகளும் பரவியுள்ளன. மருத்துவ சிகிச்சை அணிகளும், படையின் நிவாரணப் பணியாளர்களும் மீட்புதவியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வெள்ளப்பெருக்கின் நீர்மட்டம் குறைந்து வருகின்ற சில அறிகுறிகள் காணப்படுகின்றன.




























