டெங்குக் காய்ச்சல் பிடியில் டில்லி நகரம்
கடந்த பல ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்தியத் தலைநகர் டில்லியில் டெங்குக் காய்ச்சல் பரவியுள்ளது.

பட மூலாதாரம், AFP
கொசுக்களால் பரவும் இந்த நோயால் அங்கு சுமார் 25,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், சரியாக மருத்துவம் செய்யாவிடில் உயிரிழப்பும் ஏறப்படக் கூடும் என அதிகாரிகள் கூறுகிறார்கள்.
ஆனால் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அரசு கூறுவதைவிட மிக உயர்வாக இருக்கலாம் என டில்லியிலுள்ள பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்.
இதனிடையே மருத்துவமனையில் போதிய வளங்கள் இல்லாததால் நோயாளர்கள் திருப்பி அனுப்பபடுகிறார்கள், சிகிச்சைக்காக வந்துள்ளவர்களிடையே மோதல்களும் ஏற்படுகின்றன எனவும் எமது செய்தியாளர் கூறுகிறார்.
ஆனால் இந்திய அரசின் சுகாதார அமைச்சகமோ, டெங்குக் காய்சலால் பீடிக்கப்பட்டுள்ளவர்கள் மருத்துவர்களின் அறிவுரையை சரியாக பின்பற்றினால் 90 சதவீதமானவர்கள் முழுமையாக குணமடைகிறார்கள் எனக் கூறுகிறது.




























