நாமக்கல் மாவட்டத்தில் 16 வயது மாணவி கொலையில் சக மாணவர் உட்பட 3 பேர் கைது
நாமக்கல் மாவட்டத்தில் 16 வயது பள்ளி மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, சக மாணவர் உட்பட 3 பேரை காவல் துறை கைது செய்துள்ளது.

பட மூலாதாரம், BBC World Service
நாமக்கல் மாவட்டத்தில், ராசிபுரம் அருகில் உள்ள பெரிய மணலி என்ற இடத்தில் உள்ள அரசுப் பள்ளியில் கொலைசெய்யப்பட்ட மாணவி 11ஆம் வகுப்புப் படித்து வந்தார்.
நேற்று மதியம் அவர் பள்ளிக்கூடத்திற்கு வாரத நிலையில், பள்ளி நேரம் முடிவடைந்ததும் அந்த மாணவியை அவரது பெற்றோர் தேட ஆரம்பித்தனர்.
பிறகு, பள்ளிக்கு அருகே ஒரு காலியான இடத்தில் இருந்த குடிசை ஒன்றில் அந்த மாணவியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
அருகில் அந்த மாணவியின் சைக்கிள், பை ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.
இதையடுத்து, காவல்துறையின் நடவடிக்கையில் திலீப் குமார் என்ற 24 வயது நபர், அவரது நண்பர் சந்தோஷ் என்ற நபர் மற்றும் அந்த மாணவியின் சக மாணவர் ஒருவர் என மூன்று பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.
திலீப் குமார் அந்த மாணவியை விரும்பியதாகவும் ஆனால், அந்த மாணவி வேறு ஒருவரைக் காதலித்ததால், கொலைசெய்ததாகவும் தெரியவந்துள்ளது.



























