கட்டாய மதமாற்ற விவகாரம்: நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பம்

பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவில் கட்டாயப்படுத்தப்பட்ட மதமாற்றங்கள் தொடர்பான, மிகவும் வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ள விவகாரம் தொடர்பில் பிரதமர் நரேந்திர மோடி தகருத்து தெரிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து ராஜ்ய சபாவில் கூச்சல் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

பாஜக ஆட்சியில் கடும்போக்கு இந்து அமைப்புகள் தலைதூக்குவதாக விமர்சனங்கள் உள்ளன
படக்குறிப்பு, பாஜக ஆட்சியில் கடும்போக்கு இந்து அமைப்புகள் தலைதூக்குவதாக விமர்சனங்கள் உள்ளன

இதனால் சபையை ஒத்திவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஆளும் பாரதிய ஜனதாக் கட்சிக்கு நெருக்கமான வலதுசாரி இந்துத் தேசியவாதக் குழுக்கள் கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் மதமாற்றும் நிகழ்வுகளை தொடர்ச்சியாக நடத்தியுள்ள நிலையில், இதுபற்றி அரசாங்கத்தின் நிலைப்பாட்டை எதிர்க்கட்சி கோரியுள்ளது.

மோதலை ஏற்படுத்தி நாடாளுமன்றத்தை முடக்கியதன்மூலம், பாஜக மறைமுகமாக இந்த மதமாற்றங்களை அங்கீகரிப்பதாக குற்றம்சாட்டப்படுகின்றது.