அஸ்ஸாம் மாநிலத்தில் வெள்ளம்; 11 பேர் பலி

வீடுகள் இடிந்து விழுந்தும் மின்சாரம் தாக்கியும் பலர் உயிரிழந்துள்ளனர்
படக்குறிப்பு, வீடுகள் இடிந்து விழுந்தும் மின்சாரம் தாக்கியும் பலர் உயிரிழந்துள்ளனர்
பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவின் வடக்கு மாநிலமான அஸ்ஸாமில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தில் குறைந்தது 11 பேர் பலியாகியுள்ளனர்.

தலைநகர் குவஹாத்தியின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இடுப்பளவு வெள்ளத்தில் மக்கள் தமது குடியிருப்புகளை விட்டு வெளியேறிவருகின்றனர்.

வீடுகள் சரிந்துவிழுந்தும் மின்சாரம் தாக்கியும் சிலர் உயிரிழந்துள்ளனர்.

பிரம்மபுத்ராவிலும் மற்றபல ஆறுகளிலும் நீர் மட்டம் அதிகரித்துள்ளமையால் மாநிலத்தின் ஏனைய பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.