"தேர்தலின்போது தாக்குதல் நடத்த திட்டமிட்ட" சந்தேகநபர்கள் கைது

இந்தியன் முஜாஹிதீன் சின்னம்
பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவில் அடுத்த மாதம் நாடாளுமன்ற தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலின்போது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த சந்தேகத்துக்குரிய நான்கு இஸ்லாமிய பயங்கரவாதிகளை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு தாக்குதலில் ஈடுப்பட்டதாக குற்றம் சுமத்தப்படும் இந்திய முஜாஹிதீன் அமைப்புக்கு குண்டு தயாரித்து கொடுக்கும் ஜியாவர் ரஹ்மான் என்ற பாகிஸ்தானியரும் அடங்குவார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சோதனையின்போது ஏராளமான குண்டு தயாரிக்கும் பொருட்களையும் தாங்கள் பறிமுதல் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் ஊர்வலம் ஒன்றில் இந்திய முஜாஹிதீன்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் நடத்திய தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர்.