உலகின் உயரமான சிலையை அமைக்கும் நரேந்திர மோடி

குஜராத்தில் அமைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் உருவச்சிலையின் மாதிரிப் படம்
படக்குறிப்பு, குஜராத்தில் அமைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் உருவச்சிலையின் மாதிரிப் படம்
பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவின் இந்துத் தேசியவாதக் கட்சியான பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, உலகிலேயே மிக உயரமான சிலையை உருவாக்குவதற்கான முதற்கட்ட வேலைகளை துவங்கி வைத்துள்ளார்.

இந்திய சுதந்திர போராட்ட வீரரான சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலையே குஜராத் மாநிலத்தில் அமைக்கப்படுகிறது.

குஜராத் மாநிலத்தின் முதலமைச்சரான நரேந்திர மோடி, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள பொதுத் தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

குஜராத்தில் பிறந்த வல்லபாய் பட்டேலின் புகழைக் கொண்டு தன்னை நிலைநிறுத்தும் முயற்சியாகவே நரேந்திர மோடி இந்த பெரிய சிலையை அமைக்கவுள்ளதாக செய்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

'இரும்பு மனிதன்' என்று வர்ணிக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் காங்கிரஸ் கட்சியிலேயே தனது வாழ்நாளைக் கழித்தார்.

அதிகளவு பணத்தை வீணாக செலவு செய்து, சுமார் 34 கோடி டாலர்கள் மதிப்பில் இந்த சிலை அமைக்கப்படுகின்றமை தொடர்பில் எதிர்ப்பாளர்கள் மோடியை விமர்சித்துள்ளனர்.