வட இந்தியாவின் பல மாநிலங்களில் மின் தடை

பட மூலாதாரம், AFP
பிரசுரிக்கப்பட்டது
வட இந்தியாவின் பல மாநிலங்களில் இன்று திங்கட்கிழமை அதிகாலை ஏற்பட்ட பெரும் மின் தடையில், பல நகரங்கள் இருளில் மூழ்கின.
சுமார் 30 கோடி பேர் இந்த மின் தடையால் பாதிக்கப்பட்டனர். இந்த மின் தடை காரணமாக ரெயில் போக்குவரத்தும் பெருமளவில் பாதிக்கப்பட்டது.
தலைநகர் டில்லி, வட மாநிலங்கள் ராஜஸ்தான் , உத்தரப்பிரதேசம் தொடங்கி ஜம்மு காஷ்மீர் வரை ஏழு மாநிலங்கள் இந்த மின் தடையால் பாதிக்கப்பட்டன.
இரவில் ஏற்பட்ட மின் தடை காரணமாக, டில்லிவாசிகள் மின்விசிறிகள் நின்று, மின் விளக்குகளும் அணைந்த நிலையில், புழுக்கத்தைத் தாங்கமுடியாமல் வீடுகளை விட்டு வெளியே வந்தனர்.
பல மாநிலங்கள் மத்திய மின் தொகுப்பில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மின்சார அளவை விட அதிகம் எடுத்த்தாலேயே இந்த மின் தடை ஏற்பட்டதாக மத்திய அதிகாரிகள் கூறுகின்றனர்.



























