கல்யாணமானால் கல்வி நிலையத்தில் இடமில்லையா?

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்

தமிழ்நாட்டில் மதுரைக்கு அருகில் இருக்கும் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவிகள் சிலருக்கு, இந்த கல்வியாண்டின் கோடை விடுமுறையின்போது அவர்கள் குடும்பத்தார் திருமணம் செய்து வைத்ததாகவும், விடுமுறை முடிந்து பள்ளிக்கு சென்று பிளஸ் டூ வகுப்பில் சேர்ந்து படிக்க அந்த மாணவிகள் விரும்பியபோது அந்த பள்ளியில் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

திருமணம் முடிந்த பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து படித்தால் பள்ளியின் மற்ற மாணவிகளுக்கு அவர்கள் தவறான முன்னுதாரணமாக இருப்பார்கள் என்கிற காரணத்தால் அவர்கள் பள்ளியில் அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

பள்ளிநிர்வாகத்தின் இந்த அணுகுமுறை தவறு என்கிறார் தமிழ்நாட்டின் கல்வியியலாளர் எஸ் எஸ் ராஜகோபாலன். இது குறித்து அவர் பிபிசி தமிழோசைக்கு அளித்த விரிவான செவ்வியை நேயர்கள் இங்கே கேட்கலாம்.