குடியுரிமை பற்றி விளக்கமளிக்க ராகுல் காந்திக்கு உள்துறை அமைச்சகம் நோட்டீஸ்

பட மூலாதாரம், Getty Images
காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தமது குடியுரிமை தொடர்பாக விளக்கம் அளிக்கவேண்டும் என்று இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் ராஜ்ய சபை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி அளித்த புகாரை தொடர்ந்து உள்துறை அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
உள்துறை அமைச்சகத்தின் கடிதம் பெற்ற 14 நாட்களில் ராகுல் காந்தி பதிலளிக்க வேண்டுமென உத்தரவிடபட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
ராகுல் காந்திக்கு உள்துறை அமைச்சகம் ஏப்ரல் 29ம் தேதி அனுப்பியுள்ள கடிதத்தில், 2003ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ள பிரிட்டனிலுள்ள 'பேக்கோப்ஸ் லிமிடெட்' என்கிற நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராக ராகுல் காந்தி இருந்ததாகவும், 10/10/2005 முதல் 31/10/2006 வரையான காலகட்டத்தில் இந்நிறுவனம் சமர்பித்த வரவுச் செலவு திட்டத்தில், ராகுல் காந்தியின் பிறந்த நாள் கொடுக்கப்பட்டிருப்பதோடு, அவரது குடியுரிமையில் பிரிட்டீஷ் என்று தெரிவிக்கப்பட்டிருப்பது இந்த புகாரின் மூலம் தெரிய வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது,
மேலும், 17/02/2009ம் அன்று அந்த நிறுவனத்தைக் கலைப்பதற்கு அளிக்கப்பட்ட விண்ணப்பத்திலும் ராகுல் காந்தியின் குடியுரிமை பிரிட்டீஷ் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள இந்திய உள்துறை அமைச்சகம், இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டுமென சுப்பிரமணியன் சுவாமி அளித்துள்ள புகாரின் நகலையும் அனுப்பி கேட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்




























