செல்லாநோட்டு, அவிழும் வேட்டி - இது ஏ.ஆர்.ரஹ்மானின் 2017 ’டேக் இட் ஈசி ஊர்வசி’ பாடல்

காணொளிக் குறிப்பு, ரசிகர்களுக்காக ரசிகர்களால் உருவான ஏ.ஆர்.ரஹ்மான் பாட்டு
பிரசுரிக்கப்பட்டது

1990களின் ஆரம்பத்தில் கலக்கிய , ஏ.ஆர்.ரஹ்மானின் பிரபல பாடலான ’டேக் இட் ஈசி ஊர்வசி’ என்ற பாடலின் மாற்றி அமைக்கப்பட்ட வரிகளுடன் நவீன இசையில் எம் டிவி நிறுவனம் மீண்டும் வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் தன்னுடைய பிறந்தநாளன்று ரசிகர்களுடன் முகநூல் நேரலையில் உரையாற்றினார் ஏ.ஆர்.ரஹ்மான்
படக்குறிப்பு, இந்த ஆண்டு தொடக்கத்தில் தன்னுடைய பிறந்தநாளன்று ரசிகர்களுடன் முகநூல் நேரலையில் உரையாற்றினார் ஏ.ஆர்.ரஹ்மான்

கடந்தாண்டு இறுதியில் ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளமான முகநூல் மூலம் தனது ரசிகர்களுக்கு கோரிக்கை ஒன்றை வைத்திருந்தார்.

இது ஏ.ஆர்.ரஹ்மானின் 2017 டேக் இட் ஈஸ் ஊர்வசி பாடல்

அதில் தான் இசை அமைத்த பாடல் ’டேக் இட் ஈஸி ஊர்வசி’ என்ற பாடலில் வரும் சரணங்களை தற்காலத்திற்கு ஏற்றார் போல மாற்ற விரும்புவதாகவும், அந்த பாடல் வரிகளில் ஹிலரி, டிரம்ப் அல்லது பணத்தட்டுப்பாடு குறித்து தற்போது கூற வேண்டாம் என்றும் கூறியிருந்தார்.

முகநூலில் ஏ.ஆர்.ரஹ்மான் விடுத்த கோரிக்கை
படக்குறிப்பு, முகநூலில் ஏ.ஆர்.ரஹ்மான் விடுத்த கோரிக்கை

மேலும், தமிழ் பாடலில் வந்த அதே தொனியில் சுவாரஸ்மான அதே சமயம் நகைச்சுவையான சொற்களை பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்திருந்தார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த கோரிக்கையை தொடர்ந்து பல ரசிகர்கள் தங்களுடைய புதிய வரிகளை கமெண்ட் பகுதியில் தட்டிவிட்டனர்.

இது ஏ.ஆர்.ரஹ்மானின் 2017 டேக் இட் ஈஸ் ஊர்வசி பாடல்

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஹ்மான் ரசிகர்கள் இதில் பங்கேற்றனர்.

இது ஏ.ஆர்.ரஹ்மானின் 2017 டேக் இட் ஈஸ் ஊர்வசி பாடல்

குவிந்திருந்த மாற்று வரிகளிலிருந்து நான்கு பேரின் வரிகளை ஏ.ஆர்.ரஹ்மான் தேர்ந்தெடுத்தார்.

பிரசாத் கிருஷ்ணா, அகிந்த்ய வட்லு, ராஜேஷ் ராஜாமணி மற்றும் திலீப் பாலாஜி ஆகிய நால்வரின் வரிகளும் புதிய டேக் இட் ஈஸி பாடலுக்காக தேர்வானது.

இது ஏ.ஆர்.ரஹ்மானின் 2017 டேக் இட் ஈஸ் ஊர்வசி பாடல்
படக்குறிப்பு, தேர்வான பாடல் வரிகள்

அதனைத் தொடர்ந்து, ரசிகர்களின் புதிய வரிகளை கொண்டும், புதிய இசை கருவிகளை கொண்டும் நிகழ்ச்சி ஒன்றில் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த புதிய பாடலை பாடியுள்ளார்.

முன்னர், ஹிலரி, டிரம்ப் அல்லது பணத்தட்டுப்பாடு குறித்து வரிகள் வேண்டாம் என்று கூறியிருந்த ரஹ்மான் பின்னரும் அதனை இந்த பாடலில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது, இணையத்தில் இந்த பாடல் வைரலாகி வருகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

எங்களது செய்திகளை முகநூலில் படித்து கருத்துக்களை தெரிவிக்க : பிபிசி தமிழ் பேஸ்புக்

ட்விட்டரில் எங்களை பின்தொடர : பிபிசி தமிழ் டிவிட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யூ ட்யூபில் காண : பிபிசி தமிழ் யு டியூப்