சீனாவில் அரசுக்கு எதிராக போராடிய கிராம தலைவர் ஊழல் குற்றச்சாட்டில் சிறையிலடைப்பு
பிரசுரிக்கப்பட்டது
சீனாவில் உள்ளூர் நிலங்களை கைப்பற்றியதற்கு எதிராக போராடிய சீன கிராம தலைவர் ஒருவர் ஊழல் குற்றச்சாட்டில் மூன்று வருட சிறை தண்டனை பெற்றுள்ளார்.

பட மூலாதாரம், Getty
லின் சுலியன் என்னும் அவர் லஞ்சம் பெற்றுள்ளதாக நீதிமன்றம் கண்டறிந்துள்ளது; நீண்ட நாளாக இருந்த நில பிரச்சனைகள் குறித்து முதல்முறையாக ஜூன் மாதத்தில் போராட்டதை ஒருங்கிணைத்த போது அவர் கைது செய்யப்பட்டார்.
குவாங்டங் மாகாணத்தில் உள்ள அவரின் வுகன் கிராமத்தில், லின் சுலியனின் கைதை எதிர்த்து மக்கள் ஒரு வாரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்
அவர் அரசை விமர்சிப்பதை தடுக்க, அவரின் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டிருப்பதாக மக்கள் நம்புகின்றனர்.


























