தைவான் பழங்குடியின மக்களுக்கு எதிரான மீறல்களுக்கு மன்னிப்பு கோரிய அதிபர்

பட மூலாதாரம்,
பிரசுரிக்கப்பட்டது
பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் சீனப் பெருநிலப் பகுதியிலிருந்து வந்து குடியேறியது முதல் தொடங்கி, அரசின் ஆதரவோடு பல தலைமுறைகளாக தீவின் பழங்குடியின மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட மீறல்களுக்கு தைவான் அதிபர் மன்னிப்பு கோரியுள்ளார்.

பட மூலாதாரம்,
ஒவ்வொரு அரசும் பழங்குடி இன மக்களை அடக்கி, நிலங்களை பறித்து, மொழியையும் கலாசாரத்தையும் ஓரங்கட்டியிருப்பதாக சாய் இங்வென் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், EPA
பழங்குடியின வம்சாவளிப் பின்னணியை கொண்ட முதல் தைவான் அதிபர் சாய் இங்வென் ஆவார்.

பட மூலாதாரம்,
பசிபிக் தீவுகளில் வாழுகின்ற மக்களின் மரபுக்கு ஒப்பான மரபை கொண்டிருக்கும், 16 அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள பழங்குடியின மக்களின் தாயகம் தைவான் ஆகும்.




























