சீனாவில் புத்தக விற்பனையாளர்கள் கைது விவகாரம்: ஹாங்காங் தலைவர் கருத்து

பட மூலாதாரம், AP
பிரசுரிக்கப்பட்டது
சீன பெரு நிலப்பரப்பில் கைது செய்யப்பட்ட ஐந்து புத்தக விற்பனையாளர்கள் விவகாரத்தில், தன்னுடைய கவலைகளைத் தெரிவிக்கும் வகையில், சீன அரசுக்குக் கடிதம் எழுதுவதாக ஹாங் காங் தலைவர் சிஒய் லியுங் கூறியுள்ளார்.
தான் கடத்தப்பட்டு, வழக்கறிஞரை சந்திக்கும் உரிமையை வலுக்கட்டாயமாக விட்டு கொடுத்ததாக கைது செய்யப்பட்ட ஐந்து புத்தக விற்பனையாளர்களில் ஒருவரான லாம் விங் லீ கூறியிருந்தார்.
லாம் விங் லீயின் கருத்துக்களை தொடர்ந்து சிஒய் லியூங் இவ்வாறு கூறியுள்ளார்.
தற்போது, ஹாங்காங்கில் உள்ள லாம், சிறையில் இருந்த போது தற்கொலை செய்து கொள்வது பற்றி சிந்தித்ததாக பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்திருந்தார்.
சீனத் தலைவர்கள் குறித்த உறுதிப்படுத்தப்படாத தகவல்களை கொண்ட புத்தகங்களை விற்பனை செய்ததற்காக அந்த ஐவரும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டதாக பலர் நம்புகிறார்கள்.




























