பிரிட்டன்: ஐரோப்பிய ஒன்றியத்தோடு இணைந்திருக்க வாக்களிக்குமாறு தொழிற்கட்சி தலைவர் வலியுறுத்தல்

பிரசுரிக்கப்பட்டது

அடுத்த வாரம் நடைபெற இருக்கும் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தோடு இணைந்திருக்கவே பிரிட்டன் மக்கள் வாக்களிக்க வேண்டுமென்று அந்நாட்டின் முக்கிய எதிர்கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெரிமி கோர்பின் வலியுறுத்தியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தோடு இணைந்திருக்க பதிவாகும் ஒவ்வொரு வாக்கும் பிரிட்டனின் சாதாரண மக்களின் நல்வாழ்வுக்கு பதிவாகும் வாக்காக அமையும் - ஜெரெமி கோர்பயின்.
படக்குறிப்பு, ஐரோப்பிய ஒன்றியத்தோடு இணைந்திருக்க பதிவாகும் ஒவ்வொரு வாக்கும் பிரிட்டனின் சாதாரண மக்களின் நல்வாழ்வுக்கு பதிவாகும் வாக்காக அமையும் - ஜெரெமி கோர்பயின்.

ஐரோப்பிய ஒன்றியத்தோடு இணைந்திருக்கும் வலிமையான காரியத்திற்கு அவர்கள் (தங்கள் கட்சியினர்) அனைவரும் ஒன்றாக இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

அவருடைய அமைச்சரவையின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் ஒன்றிய தலைவர்கள் புடை சூழ்ந்திருக்க லண்டனின் மத்திய பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கோர்பின் பேசியபோது இதைக் கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினராக பிரிட்டன் தொடர்ந்து இருந்தது தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாத்து விரிவாக்கவும், வேலைவாய்ப்பை உருவாக்கவும், ஏற்றுமதியை மேம்படுத்தவும் வாய்ப்புக்களை வழங்கியது என்று அவர் கூறினார்.

ஐரோப்பிய ஒன்றியத்தோடு இணைந்திருப்பதற்கு பதிவாகும் ஒரு வாக்கு, பிரிட்டனின் சாதாரண மக்களின் நல்வாழ்வுக்காக பதிவு செய்யப்படுவதாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.