ஹெஸ்பொல்லாவின் மூத்த தளபதி கொல்லப்பட்டார்

பிரசுரிக்கப்பட்டது

லெபனானின் தீவிரவாதக்குழுவான, ஹெஸ்பொல்லாவின் மூத்த தளபதிகளில் ஒருவரான, முஸ்தபா பெத்ரதீன், கொல்லப்பட்டார் என்று அக்குழு கூறியிருக்கிறது.

கொல்லப்பட்ட ஹெஸ்பொல்லா தளபதி பெத்ரதீன்
படக்குறிப்பு, கொல்லப்பட்ட ஹெஸ்பொல்லா தளபதி பெத்ரதீன்

பெத்ரதீன் சிரியாவில் இஸ்ரேலிய வான் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டார் என்று ஊடகச் செய்திகள் கூறின.

ஹெஸ்பொல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவுக்கு அடுத்தப்படியாக அந்த அமைப்பின் மிக மூத்த தலைவர் அவர்தான் என்று கருதப்படுகிறது.

லெபனான் பிரதமர் ரஃபீக் ஹரிரி 2005ம் ஆண்டு கொல்லப்பட்டதன் பின்னணியில் பெத்ரதீன் இருந்தார் என்றும், பல போர்க்குற்றங்களை இழைத்தார் என்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் அவர் குற்றஞ்ச்சாட்டப்பட்டதை அடுத்து அவர் மீது சர்வதேசத் தடைகள் விதிக்கப்பட்டிருந்தன.