வங்கதேச பேராசிரியர் கொலை தொடர்பில் ஒருவர் கைது

பிரசுரிக்கப்பட்டது
வங்கதேசத்தில் பல்கலைக்கழக பேராசிரியர் ரிஸவுல் கரீம் சித்திக் சனிக்கிழமை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், ஒருவரை தடுத்துவைத்துள்ளதாக அந்நாட்டு காவல்துறை கூறுகின்றது.
அந்த நபர், வங்கதேசத்தின் பெரிய இஸ்லாமியவாதக் கட்சியின் மாணவர் அணியுடன் தொடர்புடையவர் என்றும் காவல்துறை கூறியுள்ளது.
ராஜ்ஷாஹி நகரில் இலக்கிய சஞ்சிகை ஒன்றை நடத்திவந்தவரும் ஆங்கிலம் கற்பித்தவருமான பேராசிரியர் சித்திக்-ஐ தாமே கொன்றதாக இஸ்லாமிய அரசு குழுவினர் வானொலி ஒலிபரப்பு ஒன்றை பயன்படுத்தி தெரிவித்திருந்தனர்.
அவரது படுகொலையை கண்டித்து, ராஜ்ஷாஹி பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்களும் மாணவர்களும் இரண்டாவது நாளாகவும் வகுப்புகளை புறக்கணித்துள்ளனர்.


























