போலியோ நோயை முற்றாக ஒழிக்க உலக நாடுகள் நடவடிக்கை
பிரசுரிக்கப்பட்டது
போலியோ நோயை ஒழிப்பதற்கான இறுதி நடவடிக்கைகள் உலகம் முழுவதிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பட மூலாதாரம், Reuters
குணப்படுத்த முடியாத வைரஸுக்கு எதிராக பலதரப்பட்ட தடுப்பூசிகளை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை, 150 இற்கும் அதிகமான நாடுகள் துவங்கியுள்ளன.
போலியோன நோயானது தற்காலிக அல்லது நிலையான பக்கவாதத்தை ஏற்படுத்துவதுடன், உயிருக்கு ஆபத்தானதாகவும் அமைகிறது.

அண்மைக் காலமாக குறைந்த அளவிலானவர்களே போலியோவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்நோயை தடுப்பதற்கான அழுத்தங்கள் தொடர்ந்தும் கொடுக்கப்படாவிட்டால், அது மீளவும் பரவும் அபாயம் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அச்சம் வெளியிட்டுள்ளது.




























