கென்யாவில் ஊபர் டாக்ஸி ஓட்டுநர்கள் மீது தாக்குதல்

பட மூலாதாரம், Reuters
பிரசுரிக்கப்பட்டது
கென்யத் தலைநகர் நைரோபியில் ஊபர் டாக்ஸி ஓட்டுநர்கள் மீது அதிகரித்துவரும் தாக்குதல்கள் தொடர்பில் அந்நாட்டுக் காவல்துறையினர் விசாரணைகளைத் துவங்கியுள்ளனர்.
ஊபர் நிறுவனத்தால் அறவிடப்படும் கட்டணத்திற்கு ஈடுகொடுக்க முடியாத மற்றைய நிறுவனங்களைச் சேர்ந்த ஓட்டுநர்கள் இவ்வாறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
மற்றைய நிறுவனங்களைவிட ஊபர் நிறுவனத்தில் அரைவாசிக் கட்டணம் அறவிடப்பட்டு வருகின்றது.
இதனால் இணைய சேவையை நடத்திவரும் ஊபர் நிறுவனத்தில் பணியாற்றிவரும் ஓட்டுநர்கள் தாக்கப்பட்டுவரும் நிலையில் அவர்களது வாகனங்களும் சேதமாக்கப்படுகின்றன.



























