ஹவுபாரா பறவைகளை வேட்டையாட பாகிஸ்தான் நீதிமன்றம் தடை

பட மூலாதாரம், AFP Getty
பாகிஸ்தானில் ஹவுபாரா பஸ்டர்ட் (Houbara bustard) என்ற அருகிவரும் ஒருவகை பறவைகள் வேட்டையாடப்படுவதற்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் முற்றாகத் தடை விதித்துள்ளது.
அரபு- வளைகுடா நாடுகளில் அரச குடும்பங்களால் பெரிதும் விரும்பப்படுகின்ற இந்த ஹவுபாரா பஸ்டர்ட் பறவைகள், அங்கிருந்து பாகிஸ்தான் பக்கம் குடிபெயர்ந்து வந்துபோகின்ற பறவைகளாக உள்ளன.
பாகிஸ்தான் கைச்சாத்திட்டிருக்கின்ற சர்வதேச சுற்றுச்சூழல் பாதுகாப்பு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த ஆண்டில், இந்தப் பறவைகளை வேட்டையாடுவதற்கு சிந்து மாகாண அரசாங்கம் வளைகுடா நாடுகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு சிறப்பு அனுமதி அளித்திருந்தது.
இந்தப் பறவைகளின் இறைச்சியை உண்பது பாலியல் வேட்கையை தூண்டும் என்ற நம்பிக்கை மத்திய கிழக்கில் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.




























