சவூதி அரேபியாவில் நான்கு பேருக்கு மரண தண்டனை

பிரசுரிக்கப்பட்டது

சவூதி அரேபியாவில் மேலும் நான்கு பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

சமீப காலமாக சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது அதிகரித்திருக்கிறது.
படக்குறிப்பு, சமீப காலமாக சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது அதிகரித்திருக்கிறது.

இவர்களில் மூன்று பேர் சவூதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள். கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்கள். நான்காவது நபர், போதை மருந்து கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட, சிரியா நாட்டவர்.

இந்த ஆண்டில் மட்டும் இதுவரை சுமார் 130 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. சமீப காலங்களில் சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது வெகுவாக அதிகரித்திருக்கிறது.

சவூதி அரேபியாவில் நீதி வழங்கும் முறையிலேயே பெரும் தவறு இருப்பதாக செவ்வாய்க் கிழமையன்று ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் கூறியிருந்தது. உடனடியாக மரண தண்டனைகளுக்குத் தடை விதிக்கும்படியும் தெரிவித்திருந்தது.

பெரும்பாலான மரண தண்டனைகள், பொதுமக்கள் மத்தியில் தலையை வெட்டி நிறைவேற்றப்படுகிறது.

கொலை, பாலியல் பலாத்காரம், ஆயுதங்களுடன் வந்து கொள்ளையடித்தல், போதைப்பொருள் கடத்தல், இஸ்லாமிய மதத்திலிருந்து மாறுதல் ஆகியவற்றுக்கு சவூதியில் மரண தண்டனை விதிக்கப்படுகிறது.