ஆப்கானில் பெண்கள், குழந்தைகள் பலியாவது அதிகரித்துள்ளது: ஐநா

ஆப்கானிஸ்தானில் நடந்த தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டவரின் புதைகுழியில் உறவினர்கள் (ஆவணப்படம்)
படக்குறிப்பு, ஆப்கானிஸ்தானில் நடந்த தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டவரின் புதைகுழியில் உறவினர்கள் (ஆவணப்படம்)
பிரசுரிக்கப்பட்டது

ஆப்கானிஸ்தானில் கடந்த டிசம்பரில் நேட்டோவின் தாக்குதல் நடவடிக்கை முடிவுக்கு வந்தபிறகான காலகட்டத்தில், அங்கு அதிகமான பெண்களும் குழந்தைகளும் காயமடைவதாகவும் கொல்லப்படுவதாகவும் ஐநா சபை தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் உயிரிழந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை ஒரு சதவீதம் அதிகரித்துள்ளதாக ஐநா சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த பெண்களின் எண்ணிக்கை இருபத்தி மூன்று சதவிதம் அதிகரித்துள்ளதாகவும் உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை பதின்மூன்று சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அதே அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களிலேயே அதிகமான பாதிப்புக்கள் (ஆவணப்படம்)
படக்குறிப்பு, தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களிலேயே அதிகமான பாதிப்புக்கள் (ஆவணப்படம்)

சாலையோர குண்டுகளின் பயன்பாட்டைவிட நேரடிச்சண்டைகள் அதிகரித்துள்ளதால் பெண்கள் மற்றும் குழந்தைகள் உயிரிழப்பும் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.

பொதுமக்களை இலக்குவைத்து தாக்குதல் நடத்துவதை தாலிபன்களும் மற்ற அரசு எதிர்ப்புப் படைகளும் நிறுத்த வேண்டும் என்று ஐநா வலியுறுத்தியுள்ளது.

கடந்த ஆறு மாதங்களில் ஆப்கானிஸ்தானில் மொத்தமாக கிட்டத்தட்ட ஆயிரத்தி அறுநூறு பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், மூவாயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.