நேபாள நிலச்சரிவில் 16 பேர் பலி
பிரசுரிக்கப்பட்டது
நேபாளத்தில் மேற்குப் பகுதியில் தொடர்ச்சியாகப் பெய்த மழையின் காரணமாக, குறைந்தது பதினாறு பேர் கொல்லப்பட்டனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமென அஞ்சப்படுகிறது.

பட மூலாதாரம், DeepakBudha
தலைநகர் காட்மாண்டுவிலிருந்து 200 கி.மீக்கு அப்பால் உள்ள பொகாரா என்ற கிராமத்தில் நிலச்சரிவுக்குப் பிறகுப் பலரைக் காணவில்லை.
இந்த நிலச்சரிவில் சிக்கிக்கொண்ட வீடுகளில் மீட்புப் படையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டிருப்பதாக மாவட்ட ஆட்சித் தலைவர் கிருஷ்ண பகதூர் ரவுட் பிபிசியிடம் தெரிவித்தார்.
"பாதிக்கப்பட்ட பகுதிக்கு ஏற்கனவே ஒரு மீட்புப் படை சென்றிருக்கிறது. பொகாரா - பாக்லங் நெடுஞ்சாலை நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டிருப்பதால் அதனைச் சரிசெய்து பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு மேலும் சில அணியினர் செல்ல முயற்சித்துவருகின்றனர்" என ரவுட் தெரிவித்தார்.



























