ஈரானுடனான அணுசக்தி பேச்சுவார்த்தை காலக்கெடுவை தாண்டி நீடிக்கும்
பிரசுரிக்கப்பட்டது
ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை, நிர்ணயிக்கப்பட்ட ஜூன் 30ஆம் தேதி காலக்கெடுவையும் தாண்டி நீடிக்கும் எனக் கூறப்பட்டிருக்கிறது.

பட மூலாதாரம், AFP
இந்தத் தகவலை மூத்த அமெரிக்க பிரதிநிதி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
பெரிய கருத்துவேறுபாடுகள் இன்னும் தீர்க்கப்படாமல் இருப்பதாகவும் பேச்சுவார்த்தை ஜூலை மாதத் துவக்கம் வரை நீடிக்கும் என தெரிவதாகவும் இருதரப்புமே தெரிவித்துள்ளன.
ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் ஜரிஃப், பேச்சுவார்த்தையை மேற்கொண்டு எப்படி எடுத்துச் செல்வது என்பது குறித்த ஆலோசனைக்காக தற்போது நாடு திரும்பவிருக்கிறார்.



























