கிறிஸ்தவ வதிவிட பள்ளிகளை கண்டிக்கும் கனடிய ஆணைக்குழு
பிரசுரிக்கப்பட்டது
கனடாவின் பழங்குடியின சிறார்கள், கிறிஸ்தவ வதிவிட பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பப்பட வேண்டும் என்ற முன்னாள் கொள்கையானது ஒரு கலாச்சார இனப்படுகொலை என்று ஜனடா நாட்டின் உண்மை மற்றும் நல்லிணக்கத்துக்கான ஒரு ஆணையம் விபரித்துள்ளது.

1969இல் இப்படியான பள்ளிக்கூடங்களை மூடுவதற்கு முடிவு எடுக்கப்படும் வரை, நூறு வருடத்துக்கும் அதிகமான காலம் இந்த கொள்கை பழங்குடியின பிள்ளைகளை துஷ்பிரயோகம் செய்ய பயன்பட்டது என்று நீதிபதி முர்ராய் சின்கிளயர் கூறியுள்ளார்.
இந்தக் கொள்கையை கனடாவின் இருண்ட ரகசியம் என்று அசம்பிளி ஒஃப் பெர்ஸ்ட் நேஷன் அன்ற அந்த ஆணைக்குழுவின் தலைவர் விபரித்துள்ளார்.
அந்த வதிவிட பள்ளிக்கூட முறைமை ஒருவரின் தனிப்பட்ட அடையாளத்தை, குடும்ப அலகை, சமூகத்தை, தேசத்தை மற்றும் பல தலைமுறைகளாக தொடரும் முயற்சிகளை அழித்துவிடுவதாகவும் ஆணைக்குழு கூறியுள்ளது.




























