தீவிரவாத அச்சுறுத்தலினால் வெளியேறும் நைஜீரிய சிறார்கள்
நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியிலிருந்து, போக்கோ ஹராம் தீவிரவாதிகளின் கிளர்ச்சி நடவடிக்கைகள் காரணமாக, சுமார் 800 சிறார்கள் தமது வீடுகளைவிட்டு பலவந்தமாக வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்று யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், AFP
கடந்த ஓராண்டுக்கும் குறைவான காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளது என, சிறார்கள் நலன்களுக்கான ஐ நாவின் அந்த அமைப்பு கூறுகிறது.
போக்கோ ஹராமின் வன்முறையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அந்தச் சிறார்கள் எல்லைகளைக் கடந்து சாட், நிஜேர் மற்றும் கேமரூன் ஆகிய நாடுகளுக்கு செல்கின்றனர் என்று யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
சிபூக் நகரிலிருந்து 200க்கும் அதிகமான பள்ளி மாணவிகளை அந்த இஸ்லாமியத் தீவிரவாதிகள் கடத்திச் சென்று ஓராண்டு ஆவதை குறிக்கும் வகையில் யுனிசெஃப் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
நைஜீரியாவில் பெரிய அளவில் இடம்பெறும் அவலங்களின் ஒரு பகுதியே சிபூக் சம்பவம் என்றும், அப்படியான துன்புறும் நிகழ்வுகள் முடிவுக்கு வந்தபாடில்லை எனவும் யுனிசெஃப் கூறியுள்ளது.


























