கென்ய பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிதாரிகள் தாக்குதல்; 70 பேர் சாவு
பிரசுரிக்கப்பட்டது
கென்யாவின் வடகிழக்கே முகமூடியணிந்த துப்பாக்கிதாரிகள் பல்கலைக் கழக மாணவர் விடுதியில் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 70 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

பட மூலாதாரம், AP
கரிஸ்ஸா என்ற ஊரிலுள்ள பல்கலைக்கழகத்திற்குள் தாக்குதல்களை நடத்திய நான்கு பேரும் கொல்லப்பட்டுவிட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. அந்தப் பகுதியில் தீவிரவாதிகள் ஒளிந்துள்ளார்களா என்பதை கண்டறியும் சோதனைகள் தற்போது நடக்கின்றன.
பல்கலைக்கழக வளாகத்தில் து உள்ளே நுழைந்த ஆயுத தாரிகள் உள்ளே இருந்தவர்களிம் நீங்கள் முஸ்லீம்களா அல்லது கிறிஸ்தவர்களா என்று கேட்டதாக மாணவர் ஒருவர் தெரிவித்தார். கிறிஸ்தவர்கள் அங்கேயே சுடப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்
கென்யாவிலும் சொமாலியாவிலும் அடிக்கடி தாக்குதல் நடத்திவரும் அல்ஷபாப் இஸ்லாமியவாத ஆயுததாரிகள் கரிஸ்ஸாவில் பலமுறை தாக்குதல் நடத்தியதுண்டு.



























