சோற்றில் மாவுச் சத்தை குறைப்பது குறித்து புதிய ஆய்வு

பிரசுரிக்கப்பட்டது

அரிசிச் சோற்றில் உள்ள மாவுச் சத்தைக் குறைப்பதன் மூலம், உடலில் சேரும் கலோரிகளின் அளவைக் குறைக்க முடியும் என்று இலங்கையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

"சமைக்கும் முறையில் மாற்றம், மாவுச் சத்தைக் குறைக்கும்"
படக்குறிப்பு, "சமைக்கும் முறையில் மாற்றம், மாவுச் சத்தைக் குறைக்கும்"

அரிசியில் உள்ள மாவுச் சத்தை எப்படி குறைவாக சீரணிக்க வைக்க முடியும் என்பது குறித்து அவர்கள் அமெரிக்கன் கெமிக்கல் சொசைட்டிக்கு விளக்கியுள்ளனர்.

மாவுச் சத்துக்கள் என்று கூறப்படும் கார்போஹைட்ரேட்டுகள் உடலுக்கு சக்தியை அளிக்கக் கூடிய ஒரு பொருளாக அறியப்படுகிறது.

அவற்றை நாம் சோறு போன்ற உணவின் மூலம் உட்கொள்ளும்போது, உடல் அந்த மாவுச் சத்தை சர்க்கரையாக உடைத்து மாற்றுகிறது.

எஞ்சியிருப்பவற்றை தேவைப்படும் வகையில் குளூக்கோஸாக மாற்றி நமது உடல் சேமித்து வைக்கிறது.

ஆனால் ரத்தத்தில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் குளூக்கோஸ் கலக்கும்போது அவை கொழுப்பாக மாறி உடலில் தேங்குகிறது.

இதன் காரணமாக உடல் பருமன் போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன.

ஆராய்ச்சிகளை முன்னெடுத்த சுதிர் ஜேம்ஸ்
படக்குறிப்பு, ஆராய்ச்சிகளை முன்னெடுத்த சுதிர் ஜேம்ஸ்

எனவே சோற்றிலுள்ள மாவுச் சத்தைக் குறைக்க முடிந்தால் பல உபாதைகளை தடுக்க முடியும் என்று ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.

அவ்வகையில் எப்படி அரிசியிலுள்ள மாவுச் சத்தை குறைக்க முடியும் என்பது குறித்த ஆய்வை மேற்கொண்ட கொழும்பைச் சேர்ந்த சுதிர் ஜேம்ஸ் பிபிசி தமிழோசைக்கு அளித்த பேட்டியை இங்கே கேட்கலாம்.