லண்டன் தேசிய ஓவியக் கூடத்திலும் 'செல்ஃபிக் குச்சிகளுக்கு' தடை

பிரசுரிக்கப்பட்டது

செல்ஃபீ எனப்படும் தன்னைத்தானே மொபைல் தொலைபேசிகளின் காமிராக்களைக் கொண்டு படமெடுக்க சிலர் பயன்படுத்தும் 'செல்ஃபிக் குச்சிகளை'த் தடை செய்துள்ள பிரபலமான இடங்கள் பட்டியலில் லண்டனின் பிரசித்தி பெற்ற தேசிய ஓவியக் கண்காட்சிக் கூடமான, நேஷனல் கேலரியும், சேர்ந்திருக்கிறது.

ஓவியக் கண்காட்சிக் கூடம் உட்பட பல இடங்களில் செல்ஃபி குச்சிகளுக்கு லண்டனில் தடை
படக்குறிப்பு, ஓவியக் கண்காட்சிக் கூடம் உட்பட பல இடங்களில் செல்ஃபி குச்சிகளுக்கு லண்டனில் தடை

இந்த கருவிகள் காமிராக்களை நிறுத்திவைத்து புகைப்படமெடுக்க உதவும் முக்காலி ( tripod) வகைகளைச் சேர்ந்தவை என்றும், இவை ஏற்கனவே தடை செய்யப்பட்டிருக்கின்றன என்றும் தேசிய கேலரி கூறியது.

இந்தக் கருவியால் தங்களது அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டிருக்கும் கலைப் பொருட்கள் மற்றும் அங்கு வருகை தரும் பிற பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைப் பற்றி கவலையடைந்த பிற அருங்காட்சியகங்கள் ஏற்கனவே எடுத்த நடவடிக்கைகளைப் பின்பற்றி இந்த நடவடிக்கை வருகிறது

வாஷிங்டனில் உள்ள ஸ்மித்சோனியன் அருங்காட்சியகம், நியூயார்க்கில் உள்ள மோமா , கான்பெர்ராவில் உள்ள தேசிய கேலரி மற்றும் பாரிஸ் அருகே உள்ள வெர்சாய் அரண்மனை போன்றவை இந்தக் கருவிகளை ஏற்கனவே தடை செய்திருக்கின்றன.