மலேசியாவில் வெள்ளம்: பள்ளிக்கூடங்கள் திறப்பு ஒத்திவைப்பு
பிரசுரிக்கப்பட்டது
மலேசியாவில் பல தசாப்தங்களுக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, அங்கு அடுத்த ஆண்டு பள்ளிக்கூடங்கள் திறக்கும் திகதியை ஒருவாரத்தால் அரசு ஒத்திவைத்துள்ளது.

பட மூலாதாரம், AFP
இதன்படி, ஜனவரி 11-ம் திகதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மழைவெள்ளம் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறியுள்ள சுமார் இரண்டு லட்சம் மக்கள் பள்ளிக்கூடங்களிலும் பள்ளிவாசல்களிலும் தற்காலிகமாக தஞ்சம்புகுந்துள்ளனர்.
வடக்கு மாநிலமான கெலான்டனில் வெள்ளநீர் வடிந்தோடிவருவதால் அங்கு, தற்போது நிவாரணப் பொருட்களை கொண்டுசெல்லக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதனிடையே, பெஹாங் மாநிலத்தில் கடும் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது.




























