வீதியில் கட்டிப்புரண்ட ஜேம்ஸ் பாக்கருக்கு அபராதம்

பட மூலாதாரம், AFP
பிரசுரிக்கப்பட்டது
ஆஸ்திரேலியாவின் முன்னணி செல்வந்தர்களில் ஒருவரான ஜேம்ஸ் பாக்கரும் தொலைக்காட்சி நிறுவனமொன்றின் தலைவரும் வீதியில் மோதிக்கொண்டமைக்காக அந்நாட்டு காவல்துறை, இருவருக்கும் கிட்டத்தட்ட தலா 500 டாலர்கள் அபராதம் விதித்துள்ளது.
பிரபல சூதாட்ட வணிகரான ஜேம்ஸ் பேக்கரும் சேனல் நைன் தொலைக்காட்சியின் தலைவரான டேவிட் கைங்கெல்லும் சிட்னியின் புறநகர்ப் பகுதியான போண்டி கடற்கரைக்கு அருகே வீதியில் கட்டிப் புரண்ட காட்சிகள் படம்பிடிக்கப்பட்டிருந்தன.
மோசமான நடத்தைக்காக இருவரின் மீதும் குற்றம் சாட்டி காவல்துறையினர் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
இருவரும் அபராதத் தொகையை செலுத்த முடியும் அல்லது தமக்கான அபராதத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வாதாடவும் முடியும்.




























