பெல்ஜியத்தில் நடைபெற்ற தாக்குதலில் 4 பேர் பலி

சம்பவ இடத்துக்குச் செல்லும் முதலுதவி வண்டி
படக்குறிப்பு, சம்பவ இடத்துக்குச் செல்லும் முதலுதவி வண்டி
பிரசுரிக்கப்பட்டது

பெல்ஜிய நகரமான லீஜில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுவெடிப்பு சம்பவங்களில் தாக்குதலை நடத்தியவர் உட்பட குறைந்தது நான்கு பேர் பலியாகியுள்ளனர்.

இந்தத் தாக்குதலில்75 பேர் அளவுக்கு காயமடைந்துள்ளனர்.

லீஜ் நகரில் மக்கள் நெரிசல் மிகுந்த புனித லாம்பர்ட் சதுக்கத்தில் இருந்த மக்கள் மீது, அருகிலிருந்த ஒரு கட்டிடத்தில் கூரையிலிருந்து ஒருவர் பல கையெறி குண்டுகளை வீசியதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

தாக்குதலை நடத்தியவர் சுமார் நாற்பது வயது மதிக்கத்தக்கவராக இருந்தார் என்றும் அந்த நபர் பின்னரை தன்னையும் சுட்டுக் கொண்டதாகவும் இச்சம்பவத்தைப் பார்த்தவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதலை நடத்தியவர் தனியாகவே அதை செய்தார் என்றும், போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்கள் தொடர்பாக பொலீசார் அவர் குறித்த விபரங்களை சேகரித்து வைத்திருந்தனர் என்றும் லீஜ் நகரின் மேயர் கூறியுள்ளார்.