சாட்சியங்களை கலைத்ததாக அதிபர் டிரம்பின் முன்னாள் பிரசார மேலாளருக்கு சிறை

டிரம்பின் முன்னாள் பிரச்சார மேலாளர் பால் மனஃபோர்ட்
படக்குறிப்பு, டிரம்பின் முன்னாள் பிரச்சார மேலாளர் பால் மனஃபோர்ட்
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முன்னாள் பிரசார மேலாளர் பால் மனஃபோர்டின் ஜாமீனை திரும்பப் பெற்ற வாஷிங்க்டன் டி.சி நீதிமன்றம், அவரை விசாரணை முடியும் வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது.

2016 அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை ராபர்ட் முல்லர் விசாரித்து வருகிறார். விசாரணையின் முன், பால் மனஃபோர்ட் முக்கிய சாட்சிகளை கலைக்க முயல்வதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பிணை விதிமுறைகளை மீறி மறைகுறியாக்கப்பட்ட மொபைல் செயலிகளை பயன்படுத்தி பிற நபர்களை தொடர்பு கொண்டதாகவும் மனஃபோர்ட் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அதிபர் டிரம்பின் முன்னாள் பிரச்சார மேலாளருக்கு சிறை

வரி மோசடி, பண மோசடி, சட்டவிரோதமாக அழுத்தங்கள் அளித்ததாகவும் அவர் மீது குற்றங்கள் பதியப்பட்டுள்ளன.

மனஃபோர்ட், "அவர் மேல் வைக்கப்பட்ட நம்பிக்கையை தவறாக பயன்படுத்தியதாகவும்", நீதிமன்ற நடவடிக்கைகளை "ஏதோ சந்தைப்படுத்துதல் போல நினைத்துக் கொண்டிருப்பதாகவும்" அமெரிக்க மாவட்ட நீமிபதி ஏமி பெர்மன் கூறினார்.

"இது ஒன்றும் நடுநிலைப் பள்ளி அல்ல. அவரது மொபைலை நான் வாங்கி வைத்துக் கொள்ள முடியாது" என்று நீதிபதி கூறியதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மனஃபோர்ட் இன்னும் விசாரிக்கப்படாத நிலையில், இது 'நியாயமற்றது' என்று அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

இந்நிலையில், முல்லர் விசாரணைக்கு ஒத்துழைப்பது குறித்து அதிபர் டிரம்ப் அடுத்த வாரம் முடிவெடுப்பார் என்று அவரது வழக்கறிஞர் ரூடி தெரிவித்துள்ளார்.

ஆனால், அதிபர் டிரம்ப் முல்லர் விசாரணைக்கு ஒத்துழைக்கக் கூடாது என முன்னாள் நியூயார்க்கின் மேயர் கூறியுள்ளார்.

மனஃபோர்ட் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் என்ன?

பண மோசடி மற்றும் சட்டவிரோதமாக அழுத்தங்கள் அளித்தது ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக வரும் செப்டம்பர் மாதம் முதல் மனஃபோர்ட் மீதான விசாரணை தொடங்கும்.

30 மில்லியன் டாலர்கள் அளவிற்கு பண மோசடி செய்ததாகவும், நீதித்துறையிடம் தான் லாபி செய்ய எடுத்த முயற்சிகளை மறைத்ததாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வரி மோசடி குறித்த மேலும் ஒரு விசாரணை அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.

மனஃபோர்ட் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டால், அவர் பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்க நேரிடும்.

மனஃபோர்டும் அவரது கூட்டாளியான கொன்ஸ்டான்டின் கிலிம்னிக்கும் சாட்சியங்களை கலைக்க முயன்றதாக, அவர்கள் மீது கடந்த வாரம் வழக்கு பதியப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :