இலங்கைத் தேர்தல்: தலித்துகள் பிரதிநிதித்துவம் எங்கே?

பிரசுரிக்கப்பட்டது

இலங்கையின் வடக்கே இன்றைய வாக்காளர்களில் சுமார் சரிபாதிப் பேர் சாதிய ஒடுக்குமுறைகளை சந்திக்கும் சமூகத்தவர்களாக இருந்தும், நடந்துகொண்டிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில் அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படாமல் இருப்பதாக கூறுகிறார் இலங்கை அரசியல் திறனாய்வாளர் நிலாந்தன்.

தேர்தல்கள் என்பவை ஒரு சமூகத்தின் அனைத்து தரப்பின் பிரதிநிதிகளையும் தேர்வு செய்வதற்கான வழிமுறையாகப் பார்க்கப்படும் பின்னணியில், இலங்கை நாடாளுமன்றத்தேர்தலில் தாழ்த்தப்பட்டவர்கள் வாக்காளர்களாக மட்டுமே இருக்கிறார்களே தவிர, வேட்பாளர்களாக மாறவில்லை என்றும் நிலாந்தன் தெரிவித்தார்.

சுமார் 38 ஆண்டுகால ஆயுதப் போராட்டம் வடமாகாணத்தில் சாதிய ஒடுக்குமுறைகளின் கூர்மையை, தீவிரத்தன்மையை, சாதி சார்ந்த வன்முறைகளைக் குறைத்திருந்தாலும், சாதி என்பது அங்கே முற்றாக ஒழியவில்லை என்று கூறும் நிலாந்தன், தமிழ்த்தேசியத்தை முன்னெடுக்கும் அரசியல் கட்சிகள் தலித்துகளை அரசியல் அதிகாரத்துக்கு கொண்டுவருவதில், அரசியலில் வளர்ப்பதில் இன்னமும் அக்கறை காட்டவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையின் தமிழ்த்தேசிய அரசியலில் தலித்துகளின் பங்களிப்பு மற்றும் பிரதிநிதித்துவம் எந்த அளவுக்கு இருக்கிறது அல்லது இல்லை என்பதற்கான காரணிகளை ஆராயும் அரசியல் திறனாய்வாளர் நிலாந்தனின் விரிவான செவ்வியை நேயர்கள் இங்கே கேட்கலாம்.