திருகோணமலையில் மாதா சிலை சேதம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 28 அக்டோபர், 2012 - 16:43 ஜிஎம்டி
பிபிசி தமிழ்

பிபிசி தமிழ்

இலங்கையின் திருகோணமலையில் பாலையூற்று என்னும் இடத்தில் லூர்து மாதா சிலை ஒன்று விசமிகளால் தாக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

பாலையூற்று பூங்கா சந்தியில் இருந்த பல தசாப்த பழமை வாய்ந்த மாதா சிலையே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை காலையில் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்று அப்பகுதி வாசிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக திருகோணமலை பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகிறார்கள்.

இரு தினங்களுக்கு முன்னதாக ஹஜ் பெருநாள் தினத்தன்று அநுராதபுர மாவட்டத்தில் உள்ள ஒரு முஸ்லிம் வழிபாட்டிடம் தீவைத்து எரிக்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அநுராதபுரம் மாவட்டத்தில் இதற்கு முன்னரும் ஒரு முஸ்லிம் வழிபாட்டிடம் பெரும்பான்மை இனத்தவர்களால் தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

BBC © 2014வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.