புற்றுநோய்க்கு 'துரதிருஷ்டத்தை விட புறக்காரணிகள் தான் பெரிய காரணம்'
பிரசுரிக்கப்பட்டது
புற்றுநோயாளர்களில் 90 வீதமானவர்களுக்கு, சுற்றுச்சூழல், வாழ்க்கைமுறைத் தெரிவுகள் போன்ற புறக்காரணிகளே நோய்க்கான காரணம், அவர்களின் 'துரதிருஷ்டநிலை அல்ல' என்று புதிய ஆய்வொன்று கூறுகின்றது.
நாம் எங்கே, எப்படி வாழ்கிறோம் என்பதே புற்றுநோயை தீர்மானிக்கக்கூடிய முக்கிய காரணிகள் என்று அறிவியல் சஞ்சிகையான நேச்சரில் வெளியாகியுள்ள ஆய்வு கூறுகிறது.