செவித்திறன் குறைபாடுள்ளவர்கள் வாகனம் இயக்க 'சேஃப்டி எய்டு' - 11ஆம் வகுப்பு மாணவிகள் அசத்தல்

காணொளிக் குறிப்பு, செவித்திறன் குறைபாடுள்ளவர்கள் வாகனம் இயக்க 'சேப்டி எய்டு' 11-ஆம் வகுப்பு மாணவிகள் அசத்தல்
பிரசுரிக்கப்பட்டது

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் செவித்திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள் இரு சக்கர வாகனத்தில் செல்ல வசதியாக 'சேப்டி எய்டு' என்ற கருவியை கண்டுபிடித்துள்ளனர்.மாணவிகளின் அறிவுத்திறனை வெளிப்படுத்தும் வகையில் மத்திய அரசின் 'அட்ல் டிங்கரிங் லேப்' இப்பள்ளியில் உள்ளது. 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவிகள் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து அசத்துகின்றனர். அக்ரிகல்சுரல் ரோபோட், உமன் சேஃப்டி டூல், பிஷர்மேன் அலர்ட் ட்ரோன் உள்ளிட்ட கண்டுபிடிப்புகளுக்காக தேசிய அளவில் பரிசுகளையும் வென்றுள்ளனர்.

தயாரிப்பு: பிரபுராவ் ஆனந்த்

படத்தொகுப்பு: ஜெயக்குமார் சுதந்திர பாண்டியன்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :