'சட்டவிரோத கும்பல்கள் ஆசை காட்டி மோசம் செய்கின்றன'
பிரசுரிக்கப்பட்டது
இலங்கையிலுள்ள தமிழ், முஸ்லிம் மக்களுக்கு வெளிநாடுகளில் பிரஜாவுரிமை பெற்றுத் தருவதாக ஆசைகாட்டி சட்டவிரோத பயணங்களை ஒழுங்கும் செய்யும் குற்றக்கும்பல்கள் மோசம் செய்வதாக இலங்கை காவல்துறை பேச்சாளர் எஸ்.பி.அஜித் ரோஹண பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
இந்தக் குற்றக் கும்பல்களுக்கு இலங்கையிலுள்ள அதிகாரிகளின் நெருங்கிய தொடர்பு இருப்பதும் தெரியவந்திருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் நாட்டில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதாக தவறான பிரச்சாரம் முன்னெடுக்கப்படுவதாகவும் எஸ்.பி.அஜித் ரோஹண தெரிவித்தார்.