குமார் குணரட்ணம்: தாய் மற்றும் சகோதரி கருத்துக்கள்

பிரசுரிக்கப்பட்டது

இலங்கையில் மக்கள் போராட்ட இயக்கத்தின் தலைவர் பிரேம்குமார் குணரட்ணமும், அந்த இயக்கத்தின் மகளிர் பிரிவு பொறுப்பாளர் திமுது ஆட்டிகலவும் காணாமல்போயுள்ளனர்.

அவர்கள் இருவரும் இலங்கை பாதுகாப்புத் துறையினரின் பிடியில் உள்ளதாக அந்த அமைப்பின் உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினார்கள்.

அந்தக் குற்றச்சாட்டை இலங்கை பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

இதற்கிடையில் குமார் குணரட்ணத்தின் இயக்க உறுப்பினர்களும் அவரின் குடும்ப உறவினர்களும் ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டனர்.

குமார் குணரட்ணத்தின் தாயார் வீஆர் குணரட்ணம் மற்றும் சகோதரி நிரஞ்சனி குணரட்ணம் ஆகியோர் தமிழோசைக்கு அளித்த செவ்வியை இங்கு கேட்கலாம்.