பினராய் விஜயன் கருத்து
சபரிமலை விவகாரம் தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றும் தங்கள் கட்சி பெரிய அளவில் வெற்றி பெறும் என்றும் கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் கூறுகிறது.
மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.
சபரிமலை விவகாரம் தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றும் தங்கள் கட்சி பெரிய அளவில் வெற்றி பெறும் என்றும் கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் கூறுகிறது.
"தெலுகு தேசம் கட்சிதான் வெற்றி பெறும் என்பதில் 1000 சதவீதம் நம்பிக்கை உள்ளது. அதில் துளி அளவும் எனக்கு சந்தேகம் இல்லை" என்று சந்திரபாபு நாயுடு கூறியதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
“அதிமுக, திமுகவை விரட்டியடிக்கும் வகையில் பரிசு சின்னத்திற்கு தமிழக மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. மோசடி கணிப்புகளை புறந்தள்ளுவோம் வாக்கு எண்ணிக்கையில் கவனம் வைப்போம்.” என அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Facebook
நாட்டில் இன்றும் மோதி அலை உள்ளது என்பது போன்ற நிலையை உருவாக்கவே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
சாதகமாக இருந்தாலும், பாதகமாக இருந்தாலும் கருத்துக் கணிப்புகளில் நம்பிக்கையில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

பட மூலாதாரம், Facebook
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமியிடம் தேர்தல் கருத்துக் கணிப்புகளில் தமிழகத்தில் தி.மு.கவிற்கு அதிக இடங்கள் கிடைக்குமென தெரியவந்திருப்பது குறித்துக் கேட்டனர். அதற்கு பதிலளித்தமுதல்வர், "2016ல் இதே கருத்துக் கணிப்புகளில் சேலம் மாவட்டத்தில் 3 இடங்களில்தான் அ.தி.மு.க. வெல்லுமென சொன்னார்கள். நான் தோல்வியடைவேன் என்று ஒரு ஊடகம் சொன்னது. ஆனால், சேலம் மாவட்டத்திலேயே அதிக வாக்கு எண்ணிக்கையில், 45 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றேன்.சேலத்தில் 10 இடங்களில் வெற்றிபெற்றோம். இதுதான் கருத்துக் கணிப்புகளின் நிலவரம். இதெல்லாம் கருத்துக் கணிப்பு அல்ல. கருத்துத் திணிப்பு.
நாங்கள் சொல்வது சரியா அல்லது ஊடகங்கள் சொல்வது சரியா என 23ஆம் தேதியன்று ஊடகங்களே சொல்லட்டும். " என்றார்.
இந்தியாவின் பிற பகுதிகளில் பா.ஜ.க. வெல்லுமென கருத்துக் கணிப்புகள் கூறுகின்றனவே எனக் கேட்டபோது, "தமிழ்நாட்டைப் பற்றி மட்டும்தான் சொல்ல முடியும். மற்ற மாநிலங்களைப் பற்றி எனக்குத் தெரியாது. இது அகில இந்தியக் கட்சி அல்ல.மாநிலக் கட்சி. தமிழகத்தின் நிலவரம்தான் எங்களுக்குத் தெரியும். தமிழகத்தைப் பொறுத்தவரை அ.தி.மு.கவும் அதன் கூட்டணிகளும் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றிபெறுவோம்.தமிழகத்தில் 38 தொகுதிகளிலும் பாண்டிச்சேரியில் ஒரு தொகுதியுமாக 39 நாடாளுமன்றத் தொகுதிகளிலும்வெற்றிபெறுவோம். அதேபோல, சட்டமன்றத் தேர்தலில் 22 தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிபெறும். தமிழகத்தில் 2016ல் இதேபோலத்தான் கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டது. அது பொய்யென நிரூபணமானது." என்றும் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
23ம் தேதி அன்று மக்கள் சில பகல்கனவுகளை பொய்யாக்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியிருக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள், தேர்தல் முடிவுகள் அல்ல என வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் என்பது தேர்தல் முடிவுகள் அல்ல. நாம் அதை புரிந்து கொள்ள வேண்டும். 1999ஆம் ஆண்டிலிருந்து பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் பொய்யாகியுள்ளன” என குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், get
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை நான் நம்புவது இல்லை. எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாகவும், வலிமையாகவும் இருக்க வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இந்தியா டுடே ஆக்சிஸ் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் தென் மாநிலங்களை பொறுத்த வரை, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 55 - 63 தொகுதிகளிலும், தேசிய ஜனநாயக கூட்டணி 23 - 33 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 35 - 46 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளன.
இந்திய ஊடகங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில், தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் பாஜகவுக்கு சாதகமாக உள்ளதாகவே குறிப்பிடுகின்றன.
ரிபப்ளிக் தொலைக்காட்சி மற்றும் சி-வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு பாஜக கூட்டணிக்கு 287 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 128 இடங்களும், பிற கட்சிகளுக்கு 127 இடங்களும் கிடைக்கும் என்று கூறுகிறது.
பாஜக கூட்டணி 306 இடங்கள், காங்கிரஸ் கூட்டணி 132 இடங்கள் மற்றும் பிற கட்சிகள் 104 இடங்கள் பெறும் என டைம்ஸ் நவ் தொலைக்காட்சி நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.
பாஜக கூட்டணி 242 இடங்கள், காங்கிரஸ் கூட்டணி 164 இடங்கள் மற்றும் பிற கட்சிகள் 136 இடங்கள் பெறும் என நியூஸ் எக்ஸ் தொலைக்காட்சி நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.