
கைதானவர்கள்
இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் கூட்டாக பலரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆறு பேர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
சைக்கிளில் இந்தியாவைச் சுற்றிப் பார்த்துவந்த அந்தப் பெண்மணி, ஒரு குழுவினரால் தாக்கப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார். அவரது கணவரையும் அந்தக்குழுவினர் தாக்கினர்.
இந்த இருவரிடமிருந்த பொருட்களையும் தாக்கியவர்கள் கொள்ளையடித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 20க்கும் மேற்பட்டோர் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்த வழக்கை விரைவாகத் தீர்க்கவேண்டும் என்று போலிசார் கடும் அழுத்தத்தில் இருக்கின்றனர். இந்த சம்பவம் இந்தியாவில் பெண்களின் மீது செலுத்தப்படும் வன்முறையின் அளவு குறித்து மீண்டும் கவலைகளை எழுப்பியிருக்கின்றது.







