காவிரி: "தமிழக-கர்நாடக முதல்வர்கள் சந்திக்க வேண்டும்"

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 26 நவம்பர், 2012 - 17:46 ஜிஎம்டி
மேட்டூர் அணை

இந்தப் படத்தில் மேட்டூர் அணையில் தண்ணீர் இருந்தாலும் இப்போது தண்ணீர் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்திய உச்சநீதிமன்றம் காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடகா முதல்வர்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறது.

காவிரி நதி நீர் தீர்ப்பாய உத்திரவின்படி இப்பருவத்தில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 52.8 டி.எம்.சி., நீரை கர்நாடகம் திறந்து விடுமாறு உத்தரவிடக்கோரி, தமிழக அரசு தாக்கல் செய்திருக்கும் மனு திங்கட்கிழமையன்று நீதிபதிகள் டி.கே. ஜெயின் மற்றும் மதன் லோகூர் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் நீதிபதிகள், "ஒவ்வொருமுறையும் பிரதமர் தலைமையிலான காவிரி நதிநீர் ஆணையத்தை கூட்டுமாறு உத்திரவிட இயலாது ஏன் இரு மாநில முதல்வர்கள் ஏன் அமர்ந்து பேசக்கூடாது. இது முடியாத விஷயம் அல்ல. இரு மாநில விவசாயிகளின் நலன்களை பெரிதும் மனதில் கொண்டு மனமொத்த வகையில் பேச்சு வார்த்தை நடத்துவதை நாங்கள் விரும்புகிறோம்" என அவர்கள் வலியுறுத்தினர்.

கர்நாடகத்தின் வழக்கறிஞர் நாரிமன், இரு மாநில முதல்வர்கள் கூட்டத்திற்கு தங்களுக்கு எவ்வித பிரச்னையும் இல்லை என்று தெரிவித்தார்.

ஆனால் தமிழகத்தின் சார்பில் எந்த உறுதிமொழியும் அளிக்கப்படவில்லை.

பின்னர் வழக்கு விசாரணை எதிர்வரும் நவம்பர் 30ம் நாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

மேட்டூர் அணையில் இருக்கும் நீரினை சம்பா சாகுபடிக்கென இன்னும் 10 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்தமுடியும் என்ற நிலையில், உச்சநீதிமன்ற அறிவுறுத்தல் தமிழக விவசாயிகளுக்குப் பெரும் கலக்கத்தையே ஏற்படுத்தும் என நோக்கர்கள் கருதுகின்றனர்.

BBC © 2014வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.