தமிழக அரசு கொடுக்கும் சத்துணவில் மாற்றம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 2 நவம்பர், 2012 - 18:12 ஜிஎம்டி
மதிய உணவுக்காக வரிசையில் நிற்கும் சிறுவர்கள்

மதிய உணவுக்காக வரிசையில் நிற்கும் சிறுவர்கள்

தமிழக அரசின் சத்துணவத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவில் பெரிய அளவிலான மாற்றங்கள் செய்யப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. பதின்மூன்று வகையான கலவை சாதங்களும், நான்கு வகையான முட்டையிலான உணவும், புலாவ், வெஜிடபிள் பிரியாணி போன்றவையும் கொடுக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

சென்னையில் 1927 இல் சிங்காரவேலரால் அறிமுகப்படுத்தப்பட்ட மதிய உணவுத் திட்டம், ஐம்பதுகளில் காமராஜர் ஆட்சியில் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டதாகவும் பின்னர் எம் ஜி ஆர் ஆட்சியில் அது முழுமையான அரசு திட்டமாக்கப்பட்டதாகவும் கல்வியாளர் கஜேந்திர பாபு நினைவு கூர்ந்தார்.

சத்துணவுத் திட்டத்தின் மூலம் கல்வி இடை நிற்றல் குறைந்துள்ளதாக பல ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

மிகவும் வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தமது சூழல் காரணமாக பள்ளிக் கூடத்துக்கு குழந்தைகளை அனுப்பாமல் இருக்கும் நிலையையும் இத்திட்டம் மாற்றியது. இந்நிலையில் சத்துணவுத் திட்டம் என்பது அரசின் கடமை என்று கூறும் பிரின்ஸ் கஜேந்திர பாபு, இத்திட்டத்தை விரிவாக்குவதை வரவேற்பதாகக் கூறுகிறார்.

அதேநேரம் அரசு ஆரம்பக் கல்வியை பலப்படுத்த வேறு பல நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

BBC © 2014வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.