துருக்கி: இராணுவ சதிப்புரட்சிக்கு காரணம் காட்டப்படுபவர் யார்?
பிரசுரிக்கப்பட்டது
துருக்கியில் இரண்டு வாரங்களுக்கு முன்பு தோல்வியில் முடிந்த இராணுவ சதி புரட்சியின் பின் விளைவுகளின் ஒரு பகுதியாக, இஸ்தான்புலின் நீதிமன்றத்தில் 21 செய்தியாளர்கள் ஆஜராகியுள்ளனர்.
மேலும் இருபது பேரை அதிகாரிகள் தேடிவருகின்றனர்.
அவர்கள் நாட்டை விட்டு தப்பிவிட்டதாக கூறப்படுகிறது.
நாட்டை விட்டு தப்பித்த மதகுரு ஃபெதுவுல்லா கூலென் தான் இந்த சதி புரட்சியின் சூத்திரதாரி என்று அரசாங்கம் கூறுகிறது.
அவரது ஆதரவாளர்கள் என்று சந்தேகிக்கப்படும் ஆயிரக்கணக்கானோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர், பணி நீக்கம் செய்யபப்ட்டுள்ளனர், தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
துருக்கிய அரசு குற்றம் சுமத்தும் ஃபெதுல்லாஹ் குலென் இயக்கத்தின் அடிப்படை என்ன? அது எப்படி பரவியது? விளக்குகிறது பிபிசி.