வூர்ஸ்பேர்க் தாக்குதலாளி ஒரு ஆப்கான் சிறுவன்

பிரசுரிக்கப்பட்டது

ஜெர்மனியில் ரயில் ஒன்றில் கோடாரியால் தாக்குதல் நடத்தி நால்வரை காயப்படுத்திய ஆப்கான் குடியேறியின் நோக்கம் குறித்து போலிஸார் புலனாய்வு செய்கிறார்கள்.

ஃபிராங்பேர்ட்டில் இருந்து நூற்று இருபது கிலோமீட்டர் தொலைவில் வூர்ஸ்பேர்க் நகரில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

பதினேழு வயதே ஆன தாக்குதலாளி இரு வருடங்களுக்கு முன்னதாக ஜெர்மனியை வந்தடைந்திருக்கிறார்.

தாக்குதலாளியின் அறையில் கையால் வரையப்பட்ட இஸ்லாமிய அரசின் கொடி கண்டுபிடிக்கப்பட்டதாக போலிஸார் கூறுகின்றனர்.

இவை குறித்த பிபிசியின் காணொளி.