பிரிட்டனின் புதிய அரசு ஐரோப்பிய ஒன்றியத்தின் அணுகுமுறையை மாற்றுமா?
பிரசுரிக்கப்பட்டது
லண்டன் முன்னாள் மேயர் போரிஸ் ஜான்சன் பிரிட்டனின் புதிய வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறவேண்டும் என்று பிரச்சாரம் செய்தவரை வெளியுறவு அமைச்சராக, பிரதமர் தெரீசா மே நியமித்திருப்பது பலருக்கு ஆச்சரியமளித்திருக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவது மிகப்பெரிய காரியம். அதற்குப் பொறுப்பாக கன்சர்வேடிவ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான டேவிட் டேவிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரிட்டன் விலகல் குறித்து தெரீசா மே அரசோடு பேச்சு வார்த்தைகள் நடத்தப்போகும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் என்ன நினைக்கிறார்கள்? ஆராய்கிறது பிபிசி.